உன்னை நினைக்கும் போதெல்லாம்
என் நினைவுகள்
நினைவிழக்கிறது!
உறங்கச்சென்றால்
கண்கள்
ஒத்துழையாமை செய்கிறது!
உண்ணசென்றால்
வயிறு
உண்ணாவிரதம் மேற்கொள்கிறது!
மூளை
மூலைக்கு மூலை இயங்க மறுக்கிறது,
வேளைக்கு வேளை வேலை நிறுத்தம் செய்கிறது!
மொத்தத்தில்,
உன்னால்
என் உடலே கலவரமாக காட்சியளிக்கிறது!
ஒவ்வொருமுறையும்,
கண்ணீர் புகையை வீசியே
இந்த கலவரத்தை அடக்குகிறேன்.
ஆம்.
கண்ணீரோடு
என் நுரையீரலில் புகையை வீசியே!!!

வணக்கம் சிவா
ReplyDeleteரோம்ப நேர்மையாக இருக்கின்றது உங்களின் இந்த கவிதை. -- உண்மையாகவும்
இராஜராஜன்
நன்றி இராஜராஜன்
ReplyDelete