என்னால் முடிந்தவரை
முயன்றுவிட்டேன் விலக
ஆனால் உன் நினைவுகள்
எப்போதும் என் நினைவிலே
என் இதயத்திலே...
காதலில் உண்மையை
தேடினேன் இன்றுவரை
மிஞ்சியது ஏமாற்றம் தான்
நீ என் வாழ்வில் வந்த
வசந்தமென்று நினைத்தேன்
எத்தனை முட்டாள் நான்!!!!!
என்னை காதலிப்பதாக
சொன்னது உன் அளவிடமுடியாத
பொய்களில் இதுவும் ஒன்று
என்பதை நான் உணரும் முன்
காலம் கடந்துவிட்டது!!
வலிக்கிறது !! நீ
விளையாட என் இதயம்தானா கிடைத்தது?
இன்னும் தெரியவில்லை !
தவறு எங்கே என்று???
காதல் என்பது எல்லாருக்கும்
கிடைக்ககூடிய வரம் இல்லையா?
இன்னும் எத்தனை தவம் செய்ய
உண்மை காதலை நான் பெற...
Subscribe to:
Post Comments (Atom)

உங்கள் கவிதையை படிக்கும்போது ...........
ReplyDeleteஉள்ளம் சுகமாய் வழிகிறது ........
தொடர்ந்து எழுத வாழ்த்துக்கள்