Sunday, September 20, 2009

கண்களால் காதல் செய்!


அவன் :





உன்


விழி பேசியதை


மொழி பெயர்த்தால்


கவிதை என்கிறார்கள்.




இதயத்தில் நிறைந்து


விழி வழியே


வழிகிறது


நம் காதல்!




பார்த்து பார்த்து


செய்த கண்கள் உனக்கு!


அதைப் பார்த்துக்


கொண்டிருப்பதற்காகவே


செய்த கண்கள் எனக்கு!




தினமும்


உன் வருகைக்காகக்


காத்திருக்கின்றன..


பகலில் என் கண்களும்..


இரவில் என் கனவும்..




உனக்குத் தெரியுமா?


நம் கண்களும் கூடக்


காதலிக்கின்றன!


தொட்டுக் கொள்ளாமல்


அவை ஆயிரம்


க(வி)தைகளைப் பேசுவதைப் பார்!


நம்மைப் போல…




திறந்தே இருப்பதால்தான்


என்செவியில் உன்வார்த்தைகள்


ஒலிக்கிறதென்றால்,


இமைகள் மூடிய பின்னும்


என் விழியில் உன் பிம்பம் விழுகிறதே…


அது எப்படி?




என் கண்களுக்கு ஏனிந்தப் பேராசை?


எல்லாக் கணமும் உன் கண்களைப்


பார்த்துக் கொண்டே இருக்க வேண்டுமாம்!


உன் கண்கள் இமைக்கும் பொழுது மட்டுமே


என் கண்களும் இமைப்பதைப் பார்!




அவள் :



போதும்…போதும்…


கவிதைகள் கொஞ்சம்


ஓய்வெடுக்கட்டும்!


நீ கண்களால் மட்டும்


காதல் செய்!

_
___***************____


தென்கச்சி பதில்கள்




கடவுள் உங்கள் முன் தோன்றினால் என்ன வரம் கேட்பீர்கள்?

வரம் கேட்க வாய்ப்பில்லை! கடவுளைப் பார்த்தவுடனே அதிர்ச்சியில் மயக்கம் போட்டு விழுந்து விடுவேன்.

மனதிற்கேற்ற வாழ்க்கை அமைவது எப்படி?

வாழ்க்கையை நேசிக்கக் கற்றுக் கொள்கிறவர்களுக்கு அவர்களுக்குப் பிடித்த மாதிரி வாழ்க்கை அமைந்துவிடுகிறது.

60வது ஆண்டு சுதந்திரதின விழாவுக்கு உங்கள் செய்தி என்ன?

நண்பர்களே! இன்று இரவு நமக்குச் சுதந்திரம் கிடைக்கப் போகிறது. நாளை முதல் நாம் செய்கிற தவறுகளுக்கு ஆங்கிலேயர்கள் மீது பழி போட முடியாது.

மக்களின் தலைவலிக்கும், அரசின் தவைலிக்கு என்ன காரணம்?

இன்றைய சூழ்நிலையில், மக்களின் தலைவலிக்கு அரசு காரணமாக இருக்கிறது / அரசன் தலைவலிக்கு மக்கள் காரணமாக இருக்கிறார்கள் / இருதரப்புமே சத்தியமே. என்கிற மரத்தரையைச் சாட்பிட்டால் தலைவலி குணமாகும்.

உலகம் விசித்திரமானதா?

இன்றைய நிலைமை அப்படித்தான் தோன்றுகிறது. நாய்தான் தன் வாலை ஆட்ட வேண்டும்! வால் நாயை ஆட்டிக் கொண்டிருக்கிறது.

மனிதன் வாழ்க்கையில் பூனை மட்டும் எப்படி அபசகுணம் ஆனது?

முற்காலத்தில் யாரோ ஒருத்தர் வீட்டை விட்டுப் புறப்படும் போது பூனை ஒன்று குறுக்கே ஓடியிருக்கும். போன காரியம் நடந்திருக்காது. உடனே அதற்கும் பூனைக்கும் முடிச்சுப் போட்டிருக்கும் அவருடைய மனம் இதை அடுத்தவரிடம் சொல்லியிருப்பார். இப்படித்தான் இது போன்ற மூட நம்பிக்தகைகள் முளைவிட ஆரம்பிக்கின்றன.


இப்போது எந்த அளவுக்கு அது வளர்ந்திருக்கிறது தெரியுமா? எனக்குத் தெரிந்த நண்பர் ஒருவர் எங்காவது புறப்படும் போது வானொலி பெட்டியில் மியாவ்... மியாவ்... பூனைக்குட்டிடி என்ற சினிமாப் பாட்டு சத்தம் கேட்டால்கூட பயணத்ததை நிறுத்தி விடுவார்.

காதலன் - கணவன் ஒப்பிடுக?

காதலன் கேட்டதை எல்லாம் வாங்கிக் கொடுப்பான்.
கணவன் கேட்டால் எரிந்து விடுவான்.
உயிரையே கொடுப்பேன் என்பான் காதலன்.
உயிரை வாங்குறியே ? என்பான் கணவன்!
உண்மையான கணவன் காதலன் மாதிரி நடந்து கொள்ள வேண்டும். அதுவே உன்னதமான இல்வாழ்க்கை!

வாழ்வாங்கு வாழ வழி என்ன?

அருள் தந்தை வேதாத்ரி மகரிஷியின் இரண்டொழுக்கப் பண்பாட்டின்படி வாழ்வதுதான் அதற்கு வழி;


1) நான் யாருக்கும் தீங்கு செய்ய மாட்டேன்


2) பிறர் துன்பங்களைப் போக்குவேன்

விதி மதி என்ன வித்தியாசம்?

எதை சந்திக்கிறீர்களோ அது விதி!
எப்படி சந்திக்கிறீர்களோ அது மதி!

கர்வத்திற்கும் கவுரவத்திற்கும் என்ன வேறுபாடு?

கர்வம் நமக்கு நாமே உண்டாக்கிக் கொள்வது!
கவுரவம் அடுத்தவர்கள் நமக்காக உண்டாக்குவது!

ஆத்திகவாதி நாத்திகவாதி என்ன வித்தியாசம்?

“”நம்புங்கள், நடக்கும்!” என்பவன் ஆத்திகவாதி!
“”நடக்கட்டும், நம்புகிறோம்!” என்பவன் நாத்திகவாதி!

ஆண்களால்தான் பெண்களுக்குத் தொல்லை என்பதை ஏற்கிறீர்களா?

யாரால் யாருக்குத் தொல்லை என்பதையெல்லாம் சொல்லி வம்பில்
மாட்டிக் கொள்ள எனக்கு விருப்பமில்லை. ஆனால்
பெர்னாட்ஷா கூறிய இரண்டு வரிகளை என்னால்
சொல்லாமலிருக்கவும் முடியவில்லை!
அவர் சொன்னது:
“”பெண்களால்தான் ஆண்களுக்கு நிம்மதி கிடைக்கிறது…!
பெண்கள் இல்லாவிட்டால் ஆண்களுக்கு நிம்மதியே
தேவைப்பட்டிருக்காது!”

வெற்றிக்கு தேவை பாதி அறிவு, பாதி அதிர்ஷ்டம்,
தேர்தல் வெற்றிக்கு எது தேவை?

பணம்!

பிரச்சனைகளை எதிர்கொள்வது தானே புத்திசாலித்தனம்?

பிரச்னைகளை புரிந்து கொள்வது புத்திசாலித்தனம். முடிச்சு
போடப்பட்ட விதத்தை புரிந்து கொண்டால் அதை அவிழ்ப்பது
சுலபமாகிவிடும்

புதுக்கவிதை- மரபு கவிதை என்ன வேறுபாடு?

யாப்பு இலக்கண வரம்புக்குள் அமைவது மரபு கவிதை. அந்த வரம்பை
கடந்து வருவது புதுக்கவிதை. வலம்புரிஜான் வார்த்தைகளில்
சொல்வதென்றால்...


வார்த்தைகள் நடந்து வந்தால் அது வசனம்
நடனமாடிக்கொண்டு வந்தால் அது கவிதை
நடந்து கொண்டும், நடனமாடிக்கொண்டும் வந்தால் அது புதுக்கவிதை

அலைப்பாய்கிறது மனம்! அது அடங்க என்ன வழி?

அலையவிடுங்கள் அடங்கிவிடும்

மனதில் இருப்பதை வெளியில் சொல்பவர்கள் தாம் வெகுளியா..?

பேச வேண்டிய நேரத்தில் சும்மா இருப்பவனும் சும்மா இருக்க வேண்டிய நேரத்தில் பேசுகிறவனும் வெகுளிகள்....!

மனிதனின் பெரிய சக்திஎது?

அடக்கம் தான் மனிதனின் பெரிய சக்தி என்று பெரியவர்கள்
சொல்கிறார்கள். தனக்குள் சிறியவனாக இருக்கும் ஒருத்தன் தான்
தன்னை பெரிய ஆளாக காட்டிக்கொள்ள விரும்புவான். பெரிய ஆளாக
காட்டிக்கொள்ளும் முயற்சியை கைவிடுங்கள்... அப்புறம்
நீங்கள் பெரியஆளாக இருப்பீர்கள். இது ஒரு ஜென் ஞானியின்
கருத்து. இதை எடுத்து நமக்கு சொல்லியிருப்பவர் பரமஹம்ஸ
நித்யானந்தர்

நல்ல செயல்களை செய்வதற்கு நேரம் காலம் பார்ப்பது தவறு தானே?

ஒருத்தருக்கு பல்வலி. அவர் நேரம், காலம் பார்க்க கூடியவர்.
டாக்டருக்கு போன் பண்ணினார். பல்லை எடுக்க பத்து மணிக்கு
வரச்சொல்லியிருக்கீங்க டாக்டர்.... நான் 10.15 மணிக்கு தான்
வரமுடியும். அதனாலே பிரச்சனை எதுவும் இல்லையே..? ஒண்ணும்
இல்லே.... அனஸ்தீஸியா கொடுக்கறதுக்கு நேரம் இருக்காது... அவ்வளவு
தான்

ஆண்கள் முன் பெண்கள் கால்மேல் கால்போட்டுக் கொண்டு அமரலாமா?

அவரவர் காலை அவரவர் கால் மேல் போட்டுக் கொள்வதில் அடுத்தவர்களுக்கு என்ன இடைஞ்சல்?மரியாதை என்பது காலில் இருக்கிற விஷயம் இல்லை!

வயதானவர்கள் ஏன் அதிகம் கோபப்படுகிறார்கள்?

வாழ்க்கையின் உண்மைகளைப் புரிந்து கொண்டவர்களுக்கு வயதானாலும் கோபம் வருவதில்லை.மூதறிஞர் ராஜாஜி... உடல் நிலை மோசமாகி... சென்னை அரசினர் பொதுமருத்துவமனையில் சேர்க்கப் பட்டபோது அவர் சொன்ன வார்த்தை கள்:""செத்துப் போவதற்காக என்னை இங்கே கொண்டு வந்திருக்கிறார்கள்!''

கள்ளநோட்டிலும் காந்தியடிகள் கள்ளமில்லாது சிரிப்பதைக் காணும் போது தாங்கள் என்ன நினைப்பீர்கள்?

இந்த நோட்டில் சிரிப்பாவது கள்ளமில்லாமல் இருக்கட்டுமே என்று நினைக்கிறாரோ... என்று நினைக்கத் தோன்றும்

சரியாக வாழும் முறையினை எங்கே, யாரிடம் இலவசமாகக் கற்கலாம்?

அதற்குத் தகுந்த மாதிரி ஒரு பள்ளிக்கூடம் உண்டு. அங்கே ஓர் ஆசிரியரும் உண்டு.


பள்ளிக்கூடத்தின் பெயர்: உலகம்.
ஆசிரியரின் பெயர்: அனுபவம்.

உழைப்பு, நேர்மை எல்லாம் இருந்தும் சிலரால் வாழ்க்கையில் எழும்பிவர முடியவில்லையே என்ன காரணம்?

வாய்ப்புகள் வருகிறபோது அவற்றை அடையாளம் காண முடியாமல் போவதுதான் அதற்குக் காரணம். விழிப்போடு இருங்கள். வெற்றி நிச்சயம்!

சண்டை போடும் மனைவிமார்களை சமாளிப்பது எப்படி?

அதற்கு சாமர்த்தியம் தேவை.


ஒரு ரயில் பயணம். கணவன் மனைவியிடம் கேட்டார்.

""அன்பே! அந்த இடம் உனக்கு வசதியாக இருக்கிறதா?''
""ஆமாம்!''
""அதிகமாக ஆட்டம்... குலுக்கல் ஏதுமில்லையே?''
""இல்லை!''
""ஜன்னல் வழியே வரும் எதிர்காற்று தொந்தரவு ஏதும்
கொடுக்கவில்லையே!''
""இல்லை! சுகமாய் இருக்கிறது!''
""ஓ... நல்லது... அப்போ... நீ இங்கே வா...! நான் அங்கே உக்காந்துக்கிறேன்!''

காதல் வரவேண்டிய இடத்தில் மோதல் வருவது ஏன்?

கண்களின் மோதல் தானே காதலுக்கு ஆரம்பம்?
ஆகவேமோதலில் தொடங்கி காதலில் முடிவது வரவேற்கத் தக்கது. காதலில் தொடங்கி மோதலில் முடிவது வருந்தத்தக்கது.

ஒரு மனிதன் முழுத் திருப்தி அடைவது சாப்பாட்டில் தானே?

வயிறு நிறைவது "திருப்தி' அல்ல. மனம் நிறைவதுதான் "திருப்தி.'அதனால் தான் தமிழில் அதை "மனநிறைவு' என்கிறோம். என்றாலும் ஒன்றைப் புரிந்து கொள்ளுங்கள்... சாப்பாட்டு விஷயத்தில் "திருப்தி' காண்பது சரியல்ல. ஏன் தெரியுமா? அடியிற் கண்ட வரிகளைக் கொஞ்சம் அசை போடுங்கள்.""நீங்கள் சாப்பிடுவதில் பாதி உணவு உங்களை வாழ வைக்கிறது! பாதி உணவு டாக்டர்களை வாழ வைக்கிறது!''

Friday, September 18, 2009

உண்மை காதல்..


என்னால் முடிந்தவரை
முயன்றுவிட்டேன் விலக
ஆனால் உன் நினைவுகள்
எப்போதும் என் நினைவிலே
என் இதயத்திலே...


காதலில் உண்மையை
தேடினேன் இன்றுவரை
மிஞ்சியது ஏமாற்றம் தான்
நீ என் வாழ்வில் வந்த
வசந்தமென்று நினைத்தேன்
எத்தனை முட்டாள் நான்!!!!!


என்னை காதலிப்பதாக
சொன்னது உன் அளவிடமுடியாத
பொய்களில் இதுவும் ஒன்று
என்பதை நான் உணரும் முன்
காலம் கடந்துவிட்டது!!
வலிக்கிறது !! நீ
விளையாட என் இதயம்தானா கிடைத்தது?


இன்னும் தெரியவில்லை !
தவறு எங்கே என்று???
காதல் என்பது எல்லாருக்கும்
கிடைக்ககூடிய வரம் இல்லையா?
இன்னும் எத்தனை தவம் செய்ய
உண்மை காதலை நான் பெற...

Thursday, September 17, 2009

காதல் யுத்தம்


உன்னை நினைக்கும் போதெல்லாம்
என் நினைவுகள்
நினைவிழக்கிறது!

உறங்கச்சென்றால்
கண்கள்
ஒத்துழையாமை செய்கிறது!
 
உண்ணசென்றால்
வயிறு
உண்ணாவிரதம் மேற்கொள்கிறது!

மூளை
மூலைக்கு மூலை இயங்க மறுக்கிறது,
வேளைக்கு வேளை வேலை நிறுத்தம் செய்கிறது!

மொத்தத்தில்,
உன்னால்
என் உடலே கலவரமாக காட்சியளிக்கிறது!

ஒவ்வொருமுறையும்,
கண்ணீர் புகையை வீசியே
இந்த கலவரத்தை அடக்குகிறேன்.

ஆம்.
கண்ணீரோடு
என் நுரையீரலில் புகையை வீசியே!!!

Wednesday, September 16, 2009

பெண்களிடம் ஆண்கள் நல்ல பெயர் வாங்க ஐடியாக்கள்


ஆண்கள் என்ன செய்தாலும் பெண்களிடம் நல்ல பெயர் வாங்க முடிவதில்லை. எப்போது பார்த்தாலும் சண்டைகள் மட்டுமே. இந்த பிரச்சனை தீர சில ஐடியாக்கள இங்கே உங்களுக்கு….

1.காலையில் எழுந்தவுடன் ஹாய்.. குட் மார்னிங்’ ன்னு ஒரு SMS அனுப்பணும். உன் குரலை கேட்டாத்தான் இன்னைக்கு பொழுதே நல்லபடியா விடியுதுன்னு ஒரு அப்பட்டமான பொய்யை அவிழ்த்து விடணும் (ஒரு ரூபாய் செலவுதான். என்னங்க பண்றது? பண்ணித்தான் ஆகணும்.) இதே விஷயத்தை ராத்திரி தூங்குறதுக்கு முன்னாடியும் நீங்க செஞ்சாகணும்..

2. அவங்களைப் பார்க்க போறதுக்கு முன்னாடி உங்க செல் ஃபோனோட ஸ்கிரீன் சேவர்’ல அவங்களோட புகைப்படத்தை கண்டிப்பா வெச்சுக்கணும். (எப்பவும் உன் முகத்தையே பார்த்துகிட்டே இருக்கணும்’ன்னுதான் இந்த மாதிரி வெச்சிருக்கேன்னு சொல்லுங்க. இதுலையே அவங்க க்ளீன் போல்ட் )

3. அவங்க பேரோட முதல் எழுத்தை பைக் கீ- செயின்’ல தொங்க விட்டுக்குங்க. எப்பவும் நீ என் கூடவே இருக்கணும்’ன்னுதான் இந்த மாதிரி செய்யுறேன்னு ஒரு பிட்டை விடுங்க. அப்புறம் பாருங்க…

4. சினிமாவுக்கு கூட்டிட்டு போனீங்கன்னா, படத்தை பார்க்கறீங்களோ இல்லையோ கண்டிப்பா ஐந்து நிமிஷத்துக்கு ஒரு வாட்டி அவங்களை திரும்பி திரும்பி பார்க்கணும். எதுக்கு என்னையே பார்க்குறீங்கன்னு கேட்பாங்க. உன்னைப் பார்க்கும் போது இருக்கிற சுவாரஸ்யம் படம் பார்க்கும் போது இல்லைன்னு நீங்க சொல்லணும். (வேற வழி இல்லைங்க. இந்த மாதிரி எல்லாம் நாம டயலாக் விடணும்’ன்னு அவங்க எதிர்பார்ப்பாங்க)

5. அவங்க பேர்ல நிச்சயம் ஏதாவது தமிழ் பாட்டு வந்திருக்கும். அந்த பாட்டை எப்படியாவது தேடி கண்டுபிடிச்சு ரிங்டோனா வெச்சுக்குங்க. அவங்க உங்ககிட்ட சண்டை போடும்போது, உங்க ஃபிரண்டைவிட்டு உங்க நம்பருக்கு கால் பண்ண சொல்லுங்க. அந்த பாட்டு வந்த உடனே அவங்களை பாருங்க. சண்டை எல்லாம் எங்கே போகுதுன்னே தெரியாது.

6. கவிதைங்கிற பேர்ல எதையாவது நீங்க கிரீட்டிங் கார்ட்ல கிறுக்கிக் கொடுத்தே ஆகணும். அந்த கவிதைகள்’ல வானம், கடல், குயில், தேவதை, மயில், போன்ற வார்த்தைகள் கண்டிப்பா இருந்தே ஆகணும்.

7. “நீ ரொம்ப அழகா இருக்கே”ங்கிற அகில உலக பொய்யை ஒரு நாளைக்கு ஐந்து வாட்டியாவது நீங்க சொல்லியே ஆகணும். (இதுக்கு நீங்க கடவுள்கிட்ட தனியா மன்னிப்பு கேட்டுக்குங்க)

8. ஹோட்டலுக்கு கூட்டிட்டு போனீங்கன்னா ஃபர்ஸ்ட் நீங்க ஆர்டர் பண்ணக்கூடாது. மெனு கார்டை அவங்க கையில கொடுத்து, அவங்களைத்தான் ஆர்டர் பண்ண சொல்லணும். புரியுதா? (பெண்களோட உணர்வுகளுக்கு நீங்க மதிப்பு கொடுக்குறவர்’ன்னு அவங்களுக்கு தெரியணும் இல்லை. அதுக்குத்தான்)

9. அவங்க எப்படித்தான் ட்ரஸ் பண்ணாலும், ” இந்த ட்ரஸ்’ல நீ தேவதை மாதிரி இருக்கேன்னு மனசாட்சியை கழட்டி வெச்சிட்டு பொய் சொல்லணும்”. (ராத்திரியில நீங்க தூங்கும் போது தேவதைங்க உங்க கண்ணை குத்தும். சமாளியுங்க)
10. ரொம்ப ரொம்ப முக்கியமான விஷயம். அவங்க தோழிங்ககிட்ட பேசும்போது ரொம்ப ஜாக்கிரதையா இருக்கணும். அவங்க தோழிங்களை நீங்க கண்டுக்காத மாதிரியே இருக்கணும். ஏன்னா பல பிரச்சனைகளோட தொடக்கம் இங்கே இருந்துதான் ஆரம்பிக்குது.

இந்த விஷயங்களை எல்லாம் கடைபிடிச்சு பாருங்க. உங்க காதலி உங்களை தலையில தூக்கி வெச்சு கொண்டாடுவாங்க.

அஜித் , விஜய் -பத்து வித்தியாசங்கள்


இவரு தல
அவரு தள 'பதி

இவரு அடிச்சா கண்ணு இருக்கும் காது இருக்கும் ...உயிரு மட்டும் இருக்காது .
அவரு அடிச்சா பொறி கலங்கி பூமி அதிரது தெரியும்

இவரோட தீபாவளி படம் சிவகாசியில ரிலிசானது
அவரோட சிவகாசி படம் தீபாவளிக்கு ரிலிசானது

இவரு பில்லா படத்துல அந்த பக்கம் இந்த பக்கம்னு படம் பூரா நடந்துகிடே இருந்தார்
அவரு கில்லி படம் பூரா ஓடிக்கிடே இருந்தார்.

இவரு டான்ஸ் ஆடுனா கை மட்டும் ஆடும்
அவரு டான்ஸ் ஆடுனா கால் மட்டும் ஆடும்

இவரு நெஜமாவே கார் ரேசுல போனாரு
அவரு படத்துல கார் ரேசுல போனாரு

இவரு அமர்க்களமா போக்கிரித்தனம் பண்ணாரு
அவரு போக்கிரியா அமர்க்களம் பண்ணினாரு.

இவரு காதலுக்கு கோட்டை கட்டினாரு
அவரு காதலுக்கு மரியாதை செஞ்சாரு

இவரு காதலித்து கண்ணாலம் பண்ணினாரு
அவரு கண்ணாலம் பண்ணிட்டு காதலிக்கிறாரு .

இவர வச்சி அண்ணன் டான்ஸ்மாஸ்டர் படம் இயக்கினாரு
அவர வச்சி தம்பி டான்ஸ்மாஸ்டர் படம் இயக்கினாரு.

இன்னமும் சொல்லிக்கிடே போகலாம் ...
நீங்களும் ட்ரை பண்ணி பாருங்க !

வாய் விட்டு சிரியுங்க


1. டாக்டர் சாப்பிடும் போது..அவசர அவசரமாக சாப்பிட்டு விட்டு ..அப்புறம்..சாப்பிட்டதை வாய்க்கு கொண்டு வந்து அரைச்சு சாப்பிடறேன்..
இந்த நேரத்தில எப்படி என் க்ளினிக் வந்தீங்க?
கால் நடையாகத்தான்

2.டாக்டர்..எனக்கு டைஃபாய்டா...என் நண்பர் ஒருத்தர் டைஃபாய்ட் வந்துதான் செத்தார்..நானும் அப்படி செத்துடுவேனா?
கவலைப்படாதீங்க..அப்படி ஏதாவது ஆச்சுன்னா..உங்களுக்கு வந்தது மலேரியான்னு சொல்லிடறேன்.

3.அந்த ஃபைனான்ஸ் கம்பனி போலியானதுன்னு எப்படி சொல்ற
பணம் போட்டவங்களுக்கு எல்லாம்..due date ல பணத்தை ஒழுங்கா திருப்பித் தந்துடறாங்களாம்

4.இன்னிக்கு எல்லைப் பிரச்னைக் குறித்து சமாதான ஒப்பந்தம் கையெழுத்தாகிறது
எந்தெந்த நாட்டுக்கிடையே
என்னுடைய அம்மாவுக்கும்..மனைவிக்கும் இடையேத்தான்...எல்லை மீறி சண்டை போடுவதில்லை என்று..

5.மாப்பிள்ளை வரதட்சணை வாங்கினார்னு..யாரோ போலீஸ்ல புகார் செஞ்சுட்டாங்க..
அப்புறம் என்ன ஆச்சு?
வரதட்சணை வாங்கற பழக்கம் தனக்கில்லைன்னு ..தன்னோட மூணு மனைவியையும் கொண்டுவந்து சாட்சியா காட்டினாராம்.

Tuesday, September 15, 2009

கண்ணதாசன் கவிதை


பிறப்பின் வருவது யாதெனக் கேட்டேன்
பிறந்து பாரென இறைவன் பணித்தான்!
படிப்பெனச் சொல்வது யாதெனக் கேட்டேன்
படித்துப் பாரென இறைவன் பணித்தான்!
அறிவெனச் சொல்வது யாதெனக் கேட்டேன்
அறிந்து பாரென இறைவன் பணித்தான்!
அன்பெனப் படுவது என்னெனக் கேட்டேன்
அளித்துப் பாரென இறைவன் பணித்தான்!
பாசம் என்பது யாதெனக் கேட்டேன்
பகிர்ந்து பாரென இறைவன் பணித்தான்!
மனையாள் சுகமெனில் யாதெனக் கேட்டேன்
மணந்து பாரென இறைவன் பணித்தான்!
பிள்ளை என்பது யாதெனக் கேட்டேன்
பெற்றுப் பாரென இறைவன் பணித்தான்!
முதுமை என்பது யாதெனக் கேட்டேன்
முதிர்ந்து பாரென இறைவன் பணித்தான்!
வறுமை என்பது என்னெனக் கேட்டேன்
வாடிப் பாரென இறைவன் பணித்தான்!
இறப்பின் பின்னது ஏதெனக் கேட்டேன்
இறந்து பாரென இறைவன் பணித்தான்!
'அனுபவித்தேதான் அறிவது வாழ்க்கையெனில்
ஆண்டவனே நீ ஏன்' எனக் கேட்டேன்!
ஆண்டவன் சற்றே அருகு நெருங்கி
'அனுபவம் என்பதே நான்தான்' என்றான்!

பசியும் பக்தியும்


பசிக்குச் சோறு கேட்கும்

குருட்டுப் பிச்சைக்காரனை விரட்டிவிட்டு

தினமும் அரை லிட்டர் பாலும்

சர்கரைப் பொங்கலும்

கடவுளுக்கு…….

என் துன்பத்தைக் கண் திறந்து காண வா

என்ற வேண்டுதலோடு………..

தென்றல் தழுவும் மலரில்

தூங்கதே தம்பி